×

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மாடம்பாக்கம் பகுதி மக்களிடம் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம்

தாம்பரம்: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா மாடம்பாக்கம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. அவர், இந்தியாவிற்கே வழிகாட்டும் பல முற்போக்கு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை வாயிலாக தமிழ்நாட்டில் 1 கோடியே 15 லட்சம் மகளிர் பயன்பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 4.82 லட்சம் மாணவிகள் பயன் பெறுகின்றனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதுபோல் பல்வேறு திட்டங்களில் ஏராளமானோர் பயன்பெறுகின்றனர்.

தாம்பரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை மாடம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள், மாடம்பாக்கம் பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களும் புனரமைக்கப்பட்டுள்ளது. மேலும் மழைநீர் வடிகால்வாய்கள், நவீன தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடம்பாக்கம் பெரிய ஏரி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறவுள்ளது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் டி.ஆர்.பாலுவை வெற்றிபெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மாடம்பாக்கம் நடராஜன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மாடம்பாக்கம் பகுதி மக்களிடம் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : SR Raja MLA ,Madambakkam ,DMK ,DR Balu ,Tambaram ,MLA ,SR Raja ,Perumbudur ,Chief Minister ,M. K. Stalin ,Tamil Nadu ,DR ,Balu ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி 4, 5வது...