×

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு

சென்னை: வேறு பெண்ணுடன் தொடர்பை கண்டித்ததால், வீட்டில் இருந்து 2 மகன்கள் மற்றும் தன்னை துரத்தி விட்டதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது அவரது மனைவி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ெசன்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மனைவி சாந்தி (60) அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவர் ஜாகுவார் தங்கம், மகன்கள் கிருஷ்ணன், ஜெய் ஆகியோருடன் எம்ஜிஆர்.நகர் அன்னல் காந்தி தெருவில் வசித்து வருகிறேன். கடந்த ஜனவரி மாதம் முதல் 23 வயது இளம்பெண்ணை தினமும் வீட்டிற்கு அழைத்து வந்து இரவு நேரங்களில் தங்க வைத்து அனுப்புகிறார். கடந்த 15ம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்த போது, நானும் எனது 2 மகன்களும் அவரை கண்டித்தோம். இதனால் எங்களை வீட்டில் இருந்து வெளியே துரத்திவிட்டார். எனவே, எனது கணவர் மற்றும் கள்ளத்தொடர்பில் உள்ள பெண்ணை அழைத்து கண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்: 2 மகன்களுடன் வீட்டைவிட்டு துரத்திவிட்டதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Jaguar Thangam ,CHENNAI ,Ashok Nagar All Women Police Station ,Jesannai ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மீது மனைவி போலீசில் புகார்