×

வெயில் தாக்கம் அதிகரிப்பு: வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்க முடிவு

 

ஈரோடு, ஏப்.17: வெயில் தாக்கம் கடுமையாக உள்ளதால் வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து வாக்குச்சாவடிகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், பாதுகாப்பு வசதி, சரியான நிலையில் கதவு, ஜன்னல், மின்சார வசதி, பேன், வாக்காளர் வந்து செல்ல வழிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், குடிநீர், மர நிழல் அல்லது கான்கிரீட் தள நிழல், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் கடுமையாக இருப்பதால் நிழல் தரும் மரங்கள் அல்லது கட்டிட நிழல் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர இதர வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை வாக்குச்சாவடிகளுக்கு சாமியானா பந்தல் அமைக்க வேண்டும் என்பது தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும், வாக்குப்பதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பு சாமியானா அமைக்கப்பட்டிருப்பது உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

The post வெயில் தாக்கம் அதிகரிப்பு: வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...