×

தடைகாலம் நீடிப்பதால் மீன்கள் வரத்து குறைவு… விலை கிடுகிடு உயர்வு…

அறந்தாங்கி, ஏப்.17: புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலம் என்பதால் மீன்வரத்து குறைந்தது மீன்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய 2 இடங்களில் மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இந்த பகுதியில் 450க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீனவர்கள் உள்ளனர். 5ஆயிரத்திற்கு மேற்பட்ட நாட்டுபடகு மீனவர்கள் உள்ளனர்.

தற்போது மீன்பிடி தடைகாலம் என்பதால் விசைபடகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நாட்டுபடகு மீனவர்கள் மட்டுமே கடலில் குறிப்பிட்ட தூரத்தில் மீன் பிடிக்க செல்கின்றனர். இதனால் மீன் வரத்து குறைந்து விட்டது. வரத்து குறைவால் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட மீன் வகைகள் ரூ.100ல் 300 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மீன் பிரியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இன்னும் ஒருசில வாரங்களில் இந்த விலையை விட அதிக விலையில் மீன்கள் விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். விசைபடகு மீனவர்கள் தடைகாலத்தை பயன்படுத்தி விசைபடகுகளை பழுது நீக்கும் வேலைகளையும், மீன் வளைகளை சரிசெய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது உள்ள விலைவாசி உயர்வால் மீனவர்களுக்கு தடைகால நிவாரன தொகை போதுமானதாக இல்லை. எனவே மீனவர்களுக்கு தடைகால நிவாரனம் இனிவரும் காலங்களில் கூடுதலாக வழங்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தடைகாலம் நீடிப்பதால் மீன்கள் வரத்து குறைவு… விலை கிடுகிடு உயர்வு… appeared first on Dinakaran.

Tags : Aranthangi ,Pudukottai district ,Kottapattinam ,Jagadapattinam ,Dinakaran ,
× RELATED வியாபாரி கொலையில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய அறிவுறுத்தல்