×

பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

ராயக்கோட்டை, ஏப்.17: தேர்தல் விடுமுறையையொட்டி, நேற்று பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கர்நாடகா மற்றும் தமிழகத்தின் கடைகோடி தொழில் நகரமான ஓசூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி வரும் 19ம் தேதி பொதுவிடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், கர்நாடகா மற்றும் ஓசூர் பகுதியில் தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக்கொண்டு தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், ஓசூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக திருவண்ணாமலை மற்றும் சேலம் செல்லும் பேருந்துகளில் கட்டுடங்காத கூட்டம் காணப்பட்டது. இன்றும்(17ம் தேதி), நாளையும் அதிகளவில் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல உள்ளதால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பஸ்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Tamil Nadu ,Hosur ,Karnataka ,
× RELATED எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை