×

தீ தொண்டு நாள் வார விழா

ஊத்தங்கரை, ஏப்.17: ஊத்தங்கரையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீ தொண்டு நாள் வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊத்தங்கரை நிலைய அலுவலர் ராமன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ஊத்தங்கரை பஸ் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், தீ தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல், போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் பஸ் நிலையம், தொழிற்சாலைகள், கல்லூரிகள், மருத்துவமனை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிபத்து குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் போலி ஒத்திகை பயிற்சிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post தீ தொண்டு நாள் வார விழா appeared first on Dinakaran.

Tags : Fire Charity Day Week Festival ,Uthangarai ,Fire charity day week ,Oodhangarai ,Raman ,
× RELATED சேதமான மேம்பாலத்தை சீரமைக்கும் பணி தீவிரம்