×

தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை

தேனி, ஏப்.17: தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து சிவிஜில் மூலமாக பெறப்பட்ட 55 புகார்களில் 24 புகார்கள் மீது விசாரணை நடந்தது. தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நாளை மறுதினம் (19ம்தேதி) நடக்க உள்ளது. இத்தேர்தலுக்கான தேதி கடந்த மாதம் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடந்த மாதம் 17ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

தேர்தல் நடத்தை விதிமீறல் சம்பந்தமாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தேர்தல் நடத்தை விதிகள் துவங்கியது முதலாக கட்டுப்பாட்டு அறையில் அமைக்கப்பட்ட தொலைபேசி வாயிலாக 12 புகார்கள் பெறப்பட்டன. இதில் 4 புகார்கள் தவறான தகவல் கொண்டதாக இருந்தன. இதையடுத்து அவை தவிர்த்து மீதமுள்ள 8 புகார்கள் மீது விசாரணை நடந்தது.

உதவி மையத்தில் 14 புகார்கள் பெறப்பட்டது. இதில் 5 புகார்கள் தவறான தகவலாக பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 9 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல சிவிஜில் செயலி ஆப் மூலம் 55 புகார்கள் பெறப்பட்டது. இதில் 24 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. மீதமுள்ள புகார்கள் தவறானவையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி அளவில் இதுவரை 93 புகார்கள் பெறப்பட்டதில் 52 புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்ள்ளது. 41 புகார்கள் தவறானவையாக பதிவிடப்பட்டுள்ளது.

The post தேனி தொகுதியில் சிவிஜில் செயலி மூலமாக 24 புகார்கள் மீது விசாரணை appeared first on Dinakaran.

Tags : Theni ,CVG ,Theni parliamentary seat ,CVGIL ,Dinakaran ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு