×

நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு பிறகு குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

 

ஸ்ரீபெரும்புதூர்: நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு பிறகு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட நாவலூர் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகாமன மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, நாவலூர் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், நாவலூர் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் விரிசல் விழுந்து, இடிந்து விழும் நிலையில் இருந்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு பழுதடைந்த குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டு, ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி புதிதாக அமைக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் சாலை விரிவாக்க பணியின்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இருந்து நாவலூர் கிராமம் வரை அமைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப் லைன்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஓராண்டாக இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை நிறுத்தபட்டு, ஊராட்சி நிர்வாகம் மூலம் டிராக்டர்களில் குடிநீர் சப்ளை செய்யபட்டது. இதனால், போதுமான குடிநீர் கிடைக்காமல் இப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

இதனையடுத்து ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பைப் லைன்கள் அமைக்கப்பட்டு, நாவலூர் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, நாவலூர் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் நாவலூர் பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. இதனை, கொளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) வெள்ளரை அரிகிருஷ்ணன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார். நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் வசந்தாகந்தன், பாத்திமா மணிகண்டன், ஊராட்சி செயலர் அம்சநாதன், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் குமரேசன், சுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

The post நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு பிறகு குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nawalur ,Sriperumbudur ,Kolathur panchayat, Kanchipuram district ,
× RELATED நாவலூர் கிராமத்தில் ஓராண்டிற்கு...