×

திமுகவினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்

சென்னை: திமுகவினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்றுடன் முடிகிறது. இந்நிலையில் திமுகவினரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில் ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திமுகவின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. ஒன்றிய விசாரணை அமைப்புகள் மூலமாக உரையாடல்களை ஒட்டு கேட்டு வருவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post திமுகவினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : DMK ,Election Commission ,Chennai ,RS Bharti ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...