×

ஜூம் காணொலி பிரசாரத்தில் திடீர் ஆபாச வீடியோ: தமிழிசை அதிர்ச்சி

தென் சென்னையில் பாஜ சார்பில் தமிழிசை போட்டியிடுகிறார். கடந்த 14ம் தேதி ஜூம் காணொலி மூலமாக அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் தனக்கு வாக்கு அளிக்குமாறு தமிழிசை பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் ஆபாச வீடியோவை ஜூம் காணொலியில் ஒளிபரப்பியுள்ளார். இதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழிசையும் திகைத்து பேச்சை நிறுத்தினார். பிறகு வேறு வழியின்றி தனது ஜூம் காணொலி பிரசாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் ஆன்லைன் ஜூம் காணொலி பிரசாரத்தின் போது ஆபாச வீடியோவை வெளியிட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென் சென்னை பாஜ வேட்பாளர் டிஜிட்டல் முறையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது ஆபாச வீடியோ வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஜூம் காணொலி பிரசாரத்தில் திடீர் ஆபாச வீடியோ: தமிழிசை அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,South Chennai ,BJP ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...