×

கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக வணிக வளாக கடைகளை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக சங்கத்தினர் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை, நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க, நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாக தலைமை செயலர்கள் உத்தரவிட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஒரு ஏக்கரில் உள்ள சுமார் 140 வணிக வளாக கடைகளையும் கையகப்படுத்தி இடித்துவிட்டு, பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக அரசால் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கடை உரிமையாளர்கள் விரிவாக்கப் பணிகளுக்காக கடைகளைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக சங்கத்தினர்கள் இணைந்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி நகைகடை பஜார், ஜவுளிகடை பஜார், சந்தை கடைகள், தேனி ரோடு, பேரையூர் ரோடு, மதுரை ரோடு மற்றும் வத்தலக்குண்டு ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Usilambatti, Madurai district ,Usilambatti ,
× RELATED வீடு புகுந்து மனைவி, மாமனாரை படுகொலை செய்த வாலிபர் கைது