×

பிணி அகற்றும் ஆவாரை

நன்றி குங்குமம் தோழி

பொன்னாவரை, சுடலாவாரை, நில ஆவாரை என மூன்று வகையான ஆவாரைகளை மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

*ஆவாரை குடிநீரை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. சர்க்கரை நோயால் உண்டாகும் நரம்பு மண்டல பாதிப்பு, தோல் பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறுநீர்த் ெதாற்றுகள், கண் பார்வை கோளாறு, இதய நோய்கள், கை-கால் மத மதப்பு போன்ற நோய்களும் குணமாகிறது.

*இன்சுலின் சுரக்கவும், ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்கவும் துணைபுரிகிறது.

*சிறுநீரகக் கடுப்புக்கு ஆவாரைப் ெபாடி நிவாரணம் தரும்.

*வெள்ளைப்படுதல், ஆண்மைக்குறைவு, சிறுநீரில் விந்து வெளியேறுதல், வியர்வை நாற்றம், உடலில் உப்பு பெருகுதல், உடல் வறட்சி, நாவறட்சி இவற்றுக்கும் ஆவாரை அருமருந்து.

*சீரான மாதவிடாய் இல்லாத ரத்தப்போக்கு கொண்ட சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உடைய பெண்களுக்கு ஆவாரை குடிநீர் நல்ல மருந்து.

*கருச்சிதைவை தடுக்கவும், கர்ப்பச் சூடு குறையவும் இது உதவுகிறது.

*மது குடித்து ஈரல் கெட்டுப் போனவர்களுக்கும் நல்ல மருந்து.

* இதய அடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது. தோல் வெடிப்பு, தோல் வறட்சி, வாயு பிரச்னை, சிறுநீர் எரிச்சல், ரத்த சோகைக்கு இது நல்ல மருந்து.

– கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

The post பிணி அகற்றும் ஆவாரை appeared first on Dinakaran.

Tags :
× RELATED ங போல் வளை