×

10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி ஊழல் செய்யவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது? – அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி 7.5 லட்சம் கோடி ஊழல் செய்யவும், கொரோனா நேரத்தில் பாத்திரங்களை தட்டவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர,
வேறு எதற்கு பயன்பட்டது? என அமைச்சர் மனோ தங்கராஜ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தேர்தல் பாத்திரம் மூலம் பாஜக கொள்ளையடிக்கவும், பணக்கார நண்பர்களுக்கு காண்ட்ராக்ட் பெற்று தர நாடுநாடாக சுற்றவும், கட்சிக்கு கமிஷன் வாங்கவும், 7.5 லட்சம் கோடி ஊழல் செய்யவும், கொரோனா நேரத்தில் பாத்திரங்களை தட்டவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது?

1. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்க பயன்பட்டதா?
2. சீன ஆக்கிரமிப்பை தடுக்க பயன்பட்டதா?
3. SC/ST மக்கள் மீதான தாக்குதல்களை தடுக்க பயன்பட்டதா?
4. கொரோனா லாக்-டவுனில் வட-மாநில தொழிலாளர்கள் 500-1000 கிமீ தூரம் நடந்து சென்றவர்களுக்கு உதவ பயன்பட்டதா?
5. கொரோனா நேரத்தில் மக்களின் பசியாற்ற பயன்பட்டதா?
6. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய பயன்பட்டதா?
7. விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்க பயன்பட்டதா?
8. ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து வங்கிகள் பிடுங்கிய 35000 கோடியை தடுக்க பயன்பட்டதா?
9. 7.5 லட்சம் கோடி ஊழல் நடக்காமல் இருக்க பயன்பட்டதா?
10. பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் குடியரசு தலைவரை அழைக்க பயன்பட்டதா?
11. 1 லட்சம் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க பயன்பட்டதா?
12. 1 லட்சம் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கப் பயன்பட்டதா?
13. மணிப்பூர் கலவரத்தை தடுக்கப் பயன்பட்டதா?
14. பாஜகவிற்கு 230கோடி தேர்தல் பத்திரம் வழங்கிய வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டில் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தடுக்க பயன்பட்டதா?
15. மழை, புயல், வறட்சி போன்ற பேரிடர் நேரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பயன்பட்டதா?
16. நீரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா, போன்று வங்கிகளை ஏமாற்றியவர்கள் வெளிநாட்டுக்கு தப்பியோடாமல் தடுக்க பயன்பட்டதா? அல்லது தப்பியோடியவர்களை பிடிக்க பயன்பட்டதா?
17. கொரோனாவால் நட்டத்தில் மூழ்கிய சிறுகுறு MSME தொழில்களுக்கு உதவ பயன்பட்டதா?
18. மீனவர் பிரச்சனைகளில் தீர்வு காண பயன்பட்டதா?
19. ஊழலை ஒழிக்க பயன்பட்டதா?
20. ஸ்விஸ் வங்கி கருப்பு பணத்தை மீட்க பயன்பட்டதா?
21. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க பயன்பட்டதா?
22. போதைப்பொருள் கடத்தலை தடுக்க பயன்பட்டதா?
23. போலிச் செய்திகளையும், வெறுப்பு பிரச்சாரங்களையும் தடுக்க பயன்பட்டதா?
24. பில்கிஸ் பானுவிற்கு நீதி வழங்க பயன்பட்டதா?
25. மணிப்பூர் பெண்களின் மானத்தை பாதுகாக்க பயன்பட்டதா?
26. ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்காமல் தடுக்க பயன்பட்டதா?
27. ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க பயன்பட்டதா?
28. இந்தியாவின் இயற்கை வளங்களை அதானிக்கும், வேதாந்தாவிற்கும் விற்காமல் இருக்க பயன்பட்டதா?
29. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த பயன்பட்டதா?
30. குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவாவது பயன்பட்டதா?

மக்கள் நலன் எதற்குமே பயன்படவில்லை எனில், பதவி நாற்காலியை இறுகப்பிடித்துக் கொண்டிருப்பது ஏன்? – என அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

The post 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி ஊழல் செய்யவும், போட்டோ ஷூட் நடத்தவும் பயன்பட்டதே தவிர, வேறு எதற்கு பயன்பட்டது? – அமைச்சர் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Modi ,Minister ,Mano Thangaraj ,Chennai ,Corona ,Minister Mano Thangaraj Saramari ,Minister Mano Tangaraj ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க...