×

உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதுதான் மோடியின் நோக்கம்: ராகுல் காந்தி விமர்சனம்!

கேரளா: மோடியின் நோக்கமே உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுக்க அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக சாலைப் பேரணியில் ஈடுபட்டு அப்பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி; மக்களை திசை திருப்பும் நோக்கில் திடீரென கடலுக்கு அடியில் மோடி பூஜை செய்கிறார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவேன், நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் என்கிறார் மோடி.

இந்தியாவின் மிகப்பெரும் 5 அல்லது 6 முதலாளிகளின் கருவியாக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். கடைசி வரை வேலையின்மை, விலைவாசி உயர்வு பற்றி மோடி பேசுவதில்லை. நாட்டின் பணக்காரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் இந்திய அரசியலமைப்பை அழித்து புதிதாக உருவாக்க முயற்சிக்கிறார்கள். காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் அரசியலமைப்பை பாதுகாக்க போராடி வருகிறது என்று ராகுல் கூறினார்.

 

 

The post உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசைதிருப்புவதுதான் மோடியின் நோக்கம்: ராகுல் காந்தி விமர்சனம்! appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Kerala ,Congress ,Lok Sabha elections ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை...