×

நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக எலான் மஸ்க் அறிவிப்பு

டெல்லி: மின்சார கார் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டெஸ்லா 14,000 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா, எக்ஸ் தள உரிமையாளரான எலான் மஸ்க் எக்ஸ் தளத்தைக் கைப்பற்றியது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து அவர் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவருடைய டெஸ்லா நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆட்குறைப்பு குறித்து எலான் மஸ்க் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் அறிவிப்பை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.“அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நிறுவனத்தை தயார்படுத்த உள்ளதால் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் அதிலிருக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

அதில் செலவுக் குறைப்பும் முக்கியம் என்பதனால் முழுமையாக மதிப்பாய்வு செய்ததில் நிறுவனத்தில் பணிபுரியும் 10%ற்கும் அதிகமான பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் வெறுப்பதற்கு எதுவும் இல்லை ஆனால் இது கட்டாயம் செய்யப்பட வேண்டும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் இவாறு தெரிவித்துள்ளது டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,40,473 ஆக இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் மொத்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா நிறுவனம் ஆஸ்டின் மற்றும் பெர்லினுக்கு வெளியே உள்ள இரண்டு ஆலைகளில் உற்பத்தியை அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தப் பணிநீக்கம் நிறுவனம் முழுவதுக்கும் பொருந்தும் என்பதால் 14,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

The post நிறுவனச் சீரமைப்பின் ஓர் அங்கமாக 10% ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக எலான் மஸ்க் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Delhi ,Tesla ,X ,Dinakaran ,
× RELATED எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென ஒத்திவைப்பு..!!