“நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல பாஜக திட்டம்”: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: பாஜக அரசின் பொது சிவில் சட்டம் இந்திய மக்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தி பெரும் மோதல்களுக்கு வழிவகுக்கும் என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாஜக ஆட்சியில் இந்திய ஜனநாயகத்துக்கும், சகிப்புத்தன்மைக்கும் பேராபத்து எழுந்திருப்பதாக கூறினார். பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை மக்களை பிளவு படுத்துவதுடன் நாட்டினை சர்வாதிகார பாதையில் செலுத்தும் என்றார்.

நாட்டை உடைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பாஜக ஒவ்வொரு முறையும் குற்றம் சாட்டுவதை சுட்டிக் காட்டிய சிதம்பரம்; ஜம்மு -காஷ்மீரை 3ஆக உடைத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார். இந்தியாவை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல பாஜக திட்டமிட்டு செயல்படுவதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை. சாத்தியமே இல்லாத திட்டங்களை எல்லாம் கூறி பாஜக மக்களை ஏமாற்றி திசை திருப்ப முயற்சிப்பதாகவும் கூறினார்.

The post “நாட்டை சர்வாதிகார பாதையில் கொண்டு செல்ல பாஜக திட்டம்”: முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: