×

வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி

கரூர்,ஏப்.16: வங்கிகளில் சந்தேகப்படும்படி பணம் பரிவர்த்தனை செய்யப்படுகிறதா? என்று வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்று தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாகன தணிக்கை, பரிசு பொருட்கள், பணம் உள்ளிட்டவைகள் கண்காணிப்பது தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர், தேர்தல் செலவீன பார்வையாளர் போஸ் பாபு அல்லி, தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறை, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட குழுக்கள் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்தும், ஆவணங்கள் சரிபார்ப்பிற்குபின் திருப்பி வழங்கப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் குறித்தும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள், வேட்பாளர்களின் குற்ற நடவடிக்கைகள் தொடர்பான விளம்பரங்கள் குறித்தும் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. அதனை தேர்தலில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் முழுமையாகவும், முறையாகவும் பின்பற்ற வேண்டும். நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள், டோக்கன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறதா என தொடர்ந்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்திட வேண்டும். குறிப்பாக, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையினை முறையாகவும், தீவிரமாகவும் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வங்கிகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றனவா என்பதனை வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாகவும், சந்தேகத்திற்குட்பட்டும் பணம் எடுத்தல், பணம் வரவு வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்களின் தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும். சிவிஜில் செயலி குறித்து பொதுமக்களுக்கு தொடர;ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த செயலியில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பதிவிட்டிருந்தால் உடனடியாக மறுப்பு பதிவு வெளியிட செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் திறம்பட தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாகவும், சந்தேகத்திற்குட்பட்டும் பணம் எடுத்தல், பணம் வரவு வைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்களின் தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். கண்காணிப்பு பணியில் ஈடுபடும் பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட குழுக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் வாகனங்களை தணிக்கை செய்ய வேண்டும். சிவிஜில் செயலி குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த செயலியில் பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பதிவிட்டிருந்தால் உடனடியாக மறுப்பு பதிவு வெளியிட செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடைபெறவுள்ள தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் திறம்பட தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட எஸ்பி பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உதவி இயக்குநர் வருமான வரி சுதர்சன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் தேர்தல் பார்வையாளர் பொறுப்பு அலுவலர் லேகா தமிழ்செல்வன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் ஆர்டிஓ முகமது பைசூல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (அரவக்குறிச்சி) கருணாகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (கிருஷ்ணராயபுரம்) சுரேஸ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சையது காதர், தேர்தல் தாசில்தார் முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி appeared first on Dinakaran.

Tags : Karur ,Balakrishnan ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு