×

எந்த பூத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்?: வாக்காளர் வசதிக்காக புதிய ஆப் அறிமுகம்

சென்னை, ஏப். 16: நாம் எந்த பூத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள ஓட்டர் ஹெல்ப்லைன் செயலியை அறிமுகம் செய்துள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இவர்களின் பெயர் தற்போதைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், பலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை, விடுபட்டுள்ளது என தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதாது, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலில் அறிவித்து வருகிறது. முன்னதாக, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையென்றால் மீண்டும் தங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கலாம் என்றும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இருந்தும், பலர் வாக்குப்பதிவு அன்றுதான், வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று தங்கள் பெயர் இருக்கிறதா? என்று தேடுகிறார்கள். ஒருசிலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறோம், வாக்காளர் பட்டியலில் பெயர் ஏன் இல்லை? என்று அங்குள்ள அதிகாரிகளிடம் சண்டை போடும் நிலை தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, வரிசை எண், பாகம் எண், நாம் எந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள, ஒட்டர் ஹெல்ப்லைன் ஆப் (voter helpline app) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்-பை தங்களது செல்போனில் பதிவிறக்கும் செய்து, வாக்காளர் பெயர் மற்றும் எப்பிக் எண் (வாக்காளர் அட்டையில் உள்ள எண்) அடித்தால் அனைத்து தகவல்களையும் பெற முடியும். அதாவது எந்த வாக்குச்சாவடியில் நாம் வாக்களிக்க வேண்டும், எந்த பள்ளியில் வாக்குச்சாவடி மையம் உள்ளது என அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள முடியும். இந்த செயலியை பொதுமக்கள் பயன்படுத்தி, எளிதில் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

மேலும் அவர் கூறும்ேபாது, ‘‘தற்போது வீடு வீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒரு அடையாளத்துக்கு தான். அதை வைத்து ஓட்டு போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டினால் மட்டுமே 19ம் தேதி நடை நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்’’ என்றார்.

The post எந்த பூத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும்?: வாக்காளர் வசதிக்காக புதிய ஆப் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Otter ,Tamil Nadu ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...