×

திண்டுக்கல்லில் லீக் கால்பந்து போட்டி

திண்டுக்கல், ஏப். 16: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் வீக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பிரிமியர் டிவிசன் பிரிவில் திண்டுக்கல் கேஎப்சி அணி, அனுமந்தராயன் கோட்டை லயோலா கால்பந்து அணியை 1:0 என்ற கோல் கணக்கில் வென்றது. நிலக்கோட்டை ஸ்டார் சோலார் கால்பந்து அணி, காந்தி கிராமம் பல்கலை அணியை 4:0 என்ற கோல் கணக்கில் வென்றது.முதல் டிவிசன் போட்டியில் திண்டுக்கல் செவன் டாலர்ஸ் அணி, சன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை 3: 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

அரசு பள்ளி முன்னாள் மாணவர் கால்பந்து அணி, ஆர்ட்ஸ் டிரஸ்ட் சிட்டி கால்பந்து அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது டிவிசன் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை கால்பந்து அணி என்பிஆர் கால்பந்து அணியை 8:1 என்ற கோல் கணக்கில் வென்றது. திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் அணி, சுந்தரம் மெமோரியல் அணியை 3:1 என்ற கோல் கணக்கில் வென்றது.

மூன்றாம் டிவிசன் போட்டியில் என்.கே.ஏ.பி., கால்பந்து அணி, பழநி ஸ்டால்லயன்ஸ் கால்பந்து அணிக்கு இடையே நடைபெற்ற போட்டி 1:1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. நான்காம் டிவிசன் போட்டியில் பிலே ஸ்போர்ட்ஸ் கிளப்பணி ஞானம் மெமோரியல் கால்பந்து அணிக்கு இடையே நடந்த போட்டி 3:3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இத்தகவலை மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல்லில் லீக் கால்பந்து போட்டி appeared first on Dinakaran.

Tags : League ,Dindigul ,Dindigul District Football Association ,Dindigul KFC ,Anumandarayan ,Fort Loyola Football Team ,Premier ,Nilakottai… ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...