×

பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

தாம்பரம்: சேலையூர் அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (25). குரோம்பேட்டையில் தனியார் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை வேலை முடித்தபின், ஹரிபிரசாத் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் திரும்ப முயற்சித்தபோது, தாம்பரத்தில் இருந்து குரோம்பேட்டை நோக்கி சென்ற பைக், ஹரிபிரசாத் ஓட்டிச்சென்ற பைக்கின் மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஹரிபிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த தி.நகர் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் (23) படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பிரதீப் குமார் சிட்லபாக்கத்தில் உள்ள தனியார் வாட்டர் வாஷ் கடையில் வேலை செய்து வந்தார் எனவும், இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த 2 வலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Hariprasad ,Akaram ,Selaiyur ,Crompettai ,Dinakaran ,
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...