×

வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு அதிகரிப்பு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை

பெங்களூரு: அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதோடு, மாணவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம், பெங்களூரில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.  இது குறித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்,‘‘சில மாணவர்கள் தனிப்பட்ட பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் சிலர் விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாணவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது அவர்களுக்கு குடும்பத்திற்கு மிகப்பெரிய சோகம் மற்றும் இந்திய அரசுக்கு மிகப்பெரிய கவலை. ஆனால் ஒவ்வொரு வழக்கையும் தூதரகம் ஆராய்ந்து பார்த்ததில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை. ஆபத்தான நகரங்களை தவிர்க்கும்படி மாணவர்களை எச்சரிக்கும்படி தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளில் சுமார் 11 முதல் 12லட்சம் இந்திய மாணவர்கள் இருக்கின்றனர். மாணவர்களின் நலன் அரசுக்கு மிகவும் முக்கியமானது”என்றார்.

The post வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு அதிகரிப்பு: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கவலை appeared first on Dinakaran.

Tags : Foreign Minister ,Jaisankar ,Bangalore ,United States ,Karnataka ,
× RELATED சொல்லிட்டாங்க…