×

பீர்க்கங்காய் கிரேவி

தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் – 200 கிராம் (தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
கசூரி மெத்தி – 1 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
எண்ணெய் – 1 1/2 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். பிறகு பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து பீர்க்கங்காயை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விடுங்கள். பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், கெட்டி தயிரை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். பின் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் 3-5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். கிரேவி நன்கு கொதித்ததும், அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கிப் போட்டு, அத்துடன் கொத்த மல்லியையும் தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் கிரேவி தயார்.

The post பீர்க்கங்காய் கிரேவி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை