×

கோடை வெப்பம் எதிரொலி எலுமிச்சம் பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை

 

ஈரோடு, ஏப். 15: கோடை வெப்பம் எதிரொலி காரணமாக ஈரோடு மார்க்கெட்டில் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ. 180 முதல் ரூ. 200 வரை விற்பனையாகிறது. ஈரோடு தினசரி மார்க்கெட்டுக்கு தென்காசி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் எலுமிச்சம் பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்போது, விளைச்சல் பாதிப்பு மற்றும் கோடை வெப்பத்தால் பொதுமக்களின் நுகர்வு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மார்கெட்டுக்கு எலுமிச்சம் பழம் வரத்தும் குறைந்துள்ளது. தேவை அதிகரிப்பு மற்றும் வரத்து குறைவு காரணமாக எலுமிச்சம் பழத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரியில் கிலோ ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சம் பழத்தின் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, ஈரோடு மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ எலுமிச்சம் பழம் ரூ. 180 முதல் ரூ. 200 வரை விற்பனையானது.  சில்லரை விலையில் ஒரு எலுமிச்சம் பழத்தின் விலை ரூ. 8 முதல் ரூ. 10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post கோடை வெப்பம் எதிரொலி எலுமிச்சம் பழம் கிலோ ரூ.200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode market ,Erode Daily Market ,Tenkasi ,Dindigul ,Trichy ,Dinakaran ,
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...