×

இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியது ஈரான்

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். சிரியாவில் தங்களுடைய தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதில் என ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இதில் விலகியே இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்படுவதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சிரியாவின் டமாஸ்கசில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில், அங்குள்ள ஈரான் தூதரகம் கடும் சேதமடைந்தது. இரண்டு தூதரக அதிகாரிகள் உட்பட ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் கடுங்கோபத்தில் உள்ளது.

இந்த தாக்குதலையடுத்து எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று பதற்றம் நிலவி வந்தது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்பதால், மறு உத்தரவு வரும்வரை இந்தியர்கள் இஸ்ரேல், ஈரான் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளும் பயண எச்சரிக்கையை தத்தம் நாட்டு மக்களுக்கு விடுத்தன.

இந்த நிலையில், இன்று (ஏப்.14) அதிகாலை இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ட்ரோன் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. அவற்றை இடைமறித்து அழித்துவருகிறோம் என இஸ்ரேல் ராணுவ தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் ராணுவ தளங்களில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலும், பெரிய அளவில் சேதம் என ஈரானும் கூறியுள்ளன. அண்டை நாடுகளான ஜோர்டான், ஈராக், லெபனான் தங்களது வான் பரப்பை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன. ஈரானின் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் இடையே பெரிய அளவில் மோதல் நிகழாமல் தடுக்க இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை. இந்நிலையில், பைடனின் பலவீனமான செயல்பாடே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலுக்கு காரணம் என முன்னாள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் உடன் பிரிட்டன் துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி தாக்குதலை தொடங்கியது ஈரான் appeared first on Dinakaran.

Tags : Iran ,Israel ,JERUSALEM ,Syria ,United States ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...