×

ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

ஒரத்தநாடு, ஏப்.14: ஒரத்தநாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரண்மனை கடைத்தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் மளிகைக்கடை, காய்கறி கடை, உரக்கடை, நகைக்கடை உள்பட 5க்கு மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரமும் இந்த சாலையில் வாகனங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. ஒரத்தநாடு வர்த்தக சங்கமும், காவல்துறையும் இணைந்து சிசிடிவி கேமராக்கள் பல லட்ச ரூபாய் செலவில் பொருத்தியும் அந்த கேமராக்கள் வேலை செய்யாததால் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேற்று அவ்வழியாக நடைபயிற்சி சென்ற ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் தகவலறிந்ததும் நேரில் சென்று பார்வையிட்டார்.

The post ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Orathanadu shop street ,Orathanadu ,Thanjavur District ,Orathanadu Palace Shop Street ,Orathanadu shop ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி...