×

வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு; கோடைகாலத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

காரைக்கால்,ஏப்.14: புதுவை,காரைக்கால் பகுதிகளில் கோடை காலத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கோடைக்கால வெப்பத்தை சமாளிப்பதற்கு மருத்துவர்கள் பலவேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.மக்கள் அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும்.மோர்,எலுமிச்சை சாறு இவற்றுடன் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். அல்லது இளநீர் பருக வேண்டும். மேலும் வாய் வழி நீர் சத்து கரைசலை நீரில் கரைத்து குடிக்க வேண்டும்.நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒஆர்எஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.தளர்வான மெல்லிய பருத்தி ஆடைகளை உடுத்த வேண்டும்.

கம்பளி ஆடைகளை போர்த்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி, குளிரூட்டும் கண் கண்ணாடி அணிந்து செல்லவும் குழந்தைகளை வெயிலில் அழைத்து செல்லும் போது அதிக அளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும்.சூரிய வெளிச்சம் நேரடியாக படும் திசையில் ஜன்னல் அமைந்திருந்தால் அதை பகல் நேரத்தில் மூடி, இரவு நேரத்தில் மட்டும் திறந்து வைக்கலாம்.வெப்பம் அதிகமாக இருக்கும் மதியம் 12 முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

சமையலறையை காற்றோட்டமாக வைத்திருப்பது நல்லது.குழந்தைகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கவனமாக பார்த்துக் கொள்வதுடன் அவர்களை வெயில் நேரத்தில் வெளியில் அழைத்து செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தலைச்சுற்றல், மயக்கம், குமட்டல், தலைவலி, வழக்கத்திற்கு மாறாக அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழித்தல், சுவாச பிரச்சனை ஆகிய ஆகியவை இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும்.

The post வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு; கோடைகாலத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puduvai ,Dinakaran ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்