×

சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது!

சென்னை: சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ம் முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து தொற்றின் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக விமான சேவைகள் மீண்டும் துவங்கியது.

இருந்த போதிலும் ஹாங்காங் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாங்காங் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை – ஹாங்காங் இடையிலான விமான சேவை தொடங்கியது. இந்நிலையில், சென்னை – மொரிஷியஸ் இடையிலான விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் இன்று அதிகாலை மொரிஷியஸுக்கு புறப்பட்டுச் சென்றது.

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு விமானம் மொரிஷியஸுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் மொரிஷியஸ் தற்போது மும்பையில் இருந்து வாரத்திற்கு 6 முறையும், டெல்லியில் இருந்து வாரத்திற்கு 3 முறையும் விமான சேவையை வழங்கி வருகிறது.

The post சென்னையில் இருந்து மொரிஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை இன்று தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mauritius ,Chennai airport ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்