×

குளித்தலை அருகே வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

 

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட – குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் மயிலாடி இரட்டை வாய்க்கால் பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், நெய்தலூர் தெற்கு கிராம பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் ரூ.1,10,400 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. சரியான ஆவணம் ஏதும் சமர்ப்பிக்காததால், நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம ஒப்படைத்தனர்.

The post குளித்தலை அருகே வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Standing Vigilance Committee of Perambalur Parliamentary Constituency – ,Kulithalai Assembly Constituency ,Mailadi Double Aqueduct Bridge ,Karur district ,Dinakaran ,
× RELATED குளித்தலையில் முதுகு தண்டுவட மாற்று அறுவை சிகிச்சை இலவச மருத்துவ முகாம்