×

வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார் தமிழகத்திற்கு பிரதமர் மோடி இதுவரை ஏதாவது ஒரு நல்லது செய்ததுண்டா? மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

சென்னை, ஏப்.13: மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் நேற்று துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.கே.சேகர்பாபுவும் உடன் சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் துறைமுகம் கிழக்கு பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பிரசாரத்தின் போது தயாநிதி மாறன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். அண்ணாமலை ஒரு காமெடி பீசு. நியூஸில் வருவதற்காக ஏதாவது உளறிக்கொண்டே இருப்பார். நாங்கள் அவரை எல்லாம் சீரியஸாக எடுத்தது கிடையாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தாருங்கள் என்று கேட்டால், பிரதமருக்கு காது கேட்பதில்லை. அண்ணாமலை ஒரு காமெடி பீசு, வெத்து வேட்டு என்று சொன்னவுடன் பிரதமர் மோடிக்கு காது கேட்கிறது.

தமிழ்நாடு வளர்ச்சிக்காக எங்களுடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வைக்கின்ற கோரிக்கையை கேளுங்கள். கேட்காமல் வெறும் கையை வீசி விட்டு வாக்கு கேட்க வர்றீங்களே. இதுவரை 8 முறை தமிழகம் வந்து என்ன செய்து இருக்கிறீர்கள். தமிழ்நாட்டிற்கு ஏதாவது ஒரு நல்லது செய்து இருக்கீங்களா. குறிப்பிட்ட வகையில் ஏதாவது திட்டங்கள் ஒன்றிய அரசின் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறதா. இல்லையே. எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆயிற்று. பறக்கும் சாலை திட்டம் என்ன ஆயிற்று. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்துக்கு ஒரு ரூபாய் கூட தரவில்லையே. எங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பங்கான ₹34 ஆயிரம் கோடியை கொடுத்து இருக்கிறார். நீங்கள் கொடுக்கவே இல்லையே. ஒன்னுமே கொடுக்காமல் வெறும் கையை வீசி, வெறும் வாயில் வடை சுட்டு, அந்த வடையை நீங்களே சாப்பிட்டு கொள்வீங்க. இவ்வாறு அவர் கூறினார்.

The post வாயால் மட்டுமே வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார் தமிழகத்திற்கு பிரதமர் மோடி இதுவரை ஏதாவது ஒரு நல்லது செய்ததுண்டா? மத்தியசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Dayanidhi Maran ,DMK ,Madhyachennai ,Chennai ,Dayanithi Maran ,Central Chennai Parliamentary Constituency ,Harbor Constituency ,Chennai East ,District ,Minister ,PK Shekharbabu ,
× RELATED பிரதமர் மோடி மீது நடவடிக்கை...