×

போக்குவரத்திற்கு இடையூறாக கொடி கம்பம் நட்ட நாதக மீது வழக்கு பதிவு

 

கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் அனுமதி இன்றி பொது போக்குவரத்துக்கு இடையூறாக கொடி கம்பங்களை நட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரம் கடைவீதி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று முன்தினம் உரிய அனுமதியின்றி பொது போக்குவரத்துக்கு இடையூறாக கட்சி கொடி கம்பங்களை நட்டுள்ளனர்.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக கட்சி வேட்பாளர் கருப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டதாக கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற பகுதியில் கரூர் நாடாளுமன்ற தேர்தல் வீடியோ ஒளிப்பதிவு குழு அலுவலர். ஜெகநாதன் (கடவூர் பிடிஓ) கொடுத்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post போக்குவரத்திற்கு இடையூறாக கொடி கம்பம் நட்ட நாதக மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Nathaka ,Lalapet ,Naam Tamil ,Metu Mahadanapuram ,Krishnarayapuram ,Karur District, Krishnarayapuram ,Dinakaran ,
× RELATED வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற...