×

பள்ளிபாளையம் காளான் பிரை

தேவையான பொருட்கள்:

காளான் – 200 கிராம்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 5
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தக்காளி – 1 (நறுக்கியது)
தேங்காய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்னர் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.

The post பள்ளிபாளையம் காளான் பிரை appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை