×

உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒப்புகை சீட்டு தொடர்பான வழக்குகள் 16ல் விசாரணை

புதுடெல்லி: வாக்காளர் தனது வாக்கை யாருக்கு செலுத்தினார் என்பதை உறுதிபடுத்த மின்னணு வாக்கு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவர் வாக்கை செலுத்தியதும், 7 விநாடிகளுக்கு விவிபேட் ஒப்புகை சீட்டில் வாக்காளர் பதிவான தங்கள் வாக்கை சரி பார்க்க முடியும். இந்த பதிவான வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் எண்ணப்பட்டு விட்டதா என்பதையும் விவிபேட் இயந்திரம் மூலம் வாக்காளர் சரிபார்க்க முடியுமா என்பதை உறுதிபடுத்த ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இதே போல, தேர்வு செய்யப்பட்ட 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு பதிலாக 100 சதவீத ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென சமூக ஆர்வலர் அருண் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் வரும் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா அமர்வு நேற்று உத்தரவிட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒப்புகை சீட்டு தொடர்பான வழக்குகள் 16ல் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,NEW DELHI ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு