×

கோடை வெப்பத்தை சமாளிக்க கிலோ ரூ.15க்கு தர்பூசணி கூவி, கூவி விற்பனை

 

கரூர், ஏப். 7: கரூரில் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு கூவி, கூவி விற்பனை செய்கின்றனர். தமிழகத்தில் கோடை காலமான மார்ச் மாதம் முதல் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் கடும் வெயில் வாட்டி வதைக்கும். இந்த காலகட்டத்தில் பிற மாவட்டங்களில் விளையக்கூடிய தர்பூசணி, முலாம்பழம், திராட்சை, கிர்ணி பழம், வெள்ளரிக்காய் மற்றும் சர்பத் ஆகியவை கோடைகாலத்தில் குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பழங்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் தற்போது தர்பூசணி அதிகம் விளையக்கூடிய விழுப்புரம், பண்ருட்டி, கள்ளக்குறிச்சி மற்றும் ஆந்திர மாநிலத்தில் அதிக அளவு தர்பூசணி விளைந்துள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் கரூர் மற்றும் சுற்றுப்புறங்களுக்கு நான்கு சக்கர வாகனங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தர்பூசணி விலை விளைச்சல் காரணமாக இரண்டு கிலோவில் சுமார் 20 கிலோ வரை தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது.

ஒரு வீட்டில் 5 பேர் மற்றும் அதற்கு அதிகமாக இருக்கும் வீடுகளில் 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். கரூரில் ஜவர் பஜார், கோவை ரோடு, வெங்கமேடு, ராயனூர், தான்தோன்றிமலை, காந்திகிராமம், மண்மங்கலம், பசுபதிபாளையம், வாங்க பாளையம் அதிக அளவில் தர்ப்பூசணி விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளுக்கு சென்று தர்பூசணியை நேரடியாகவும் மற்றும் ஜூஸ் போட்டும் பள்ளி மாணவர்கள் கோடைகாலம் என்பதால் வீட்டில் இருந்து கொண்டு ஜூஸ் போட்டும் சாப்பிடுகின்றனர்.

The post கோடை வெப்பத்தை சமாளிக்க கிலோ ரூ.15க்கு தர்பூசணி கூவி, கூவி விற்பனை appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...