×

கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்திருக்கிறேன்; மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம்

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தொகுதி முழுவதும் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி, தி.நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
நான், பிரசாரத்துக்காக மட்டும் இங்கு வரவில்லை. தொகுதி முழுவதும் வீதி வீதியாக சென்று வருவதற்கு காரணம், ஒவ்வொரு பகுதியிலும் இருக்கக்கூடிய பிரச்னைகளை குறித்து வைத்து கொள்கிறேன். எம்பியாக வந்த உடன் இந்த பிரச்னைகளை அனைத்தையும் தீர்த்து வைப்பேன்.

தென்சென்னை தொகுதி மக்களுக்காகவே எனது ஆளுநர் பதவியை விட்டு விட்டு வந்திருக்கிறேன். மீனவர்களின் பிரச்னைகள் அனைத்தையும் பாஜ அரசு தீர்த்து வைக்கும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மக்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்று தர வேண்டும். பெண்கள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தருவது போன்ற பல திட்டங்கள் என்னிடம் உள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தென்சென்னை தொகுதி பிரசாரத்துக்கு வருகிறார்கள். இது எனக்கு பக்கபலமாக இருக்கும். 20 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

The post கவர்னர் பதவியை விட்டு விட்டு வந்திருக்கிறேன்; மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்: தென்சென்னை பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : South Chennai ,BJP ,Tamilisai Soundararajan ,CHENNAI ,South Chennai Parliamentary Constituency ,D. Nagar ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...