×

காரைக்குடி அருகே 148 ஆண்டுகால கல்வெட்டு கண்டுபிடிப்பு

காரைக்குடி : காரைக்குடி அருகே கல்லல் அரண்மனை சிறுவயலில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் காளிராசா, கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 148 ஆண்டுகள் பழமையான தாது பஞ்சகால ஜமீன்தார் கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.இதுகுறித்து காளிராசா கூறுகையில், ‘‘கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் பகுதியில் உள்ள சீனக்கண்மாய் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

கரையை ஒட்டியுள்ள கட்டுமான பகுதியில் சுமார் 2.5 அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் உடையதாக கல்வெட்டு உள்ளது. இதில் 1876ம் வருடம் மே 8ம் தேதி தாது வருசம் சித்திரை 28ம் தேதி சிவ சப் கட்டணூர் ஜமீன்தார் முத்துவடுகு முத்துராலிங்க தேவர்கள் என்று எழுத்தப்பட்டுள்ளது. இதில் சிவ சப் என்பது சிவகங்கை சார்பு என பொருள் படுவதாகக் கொள்ளலாம். கண்மாயை முத்துவடுகு என்ற முத்துராமலிங்க ஜமீன்தார் கண்மாய் மற்றும் கலுங்கை சீர் செய்தது தெரிகிறது, என்றார்.

The post காரைக்குடி அருகே 148 ஆண்டுகால கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Sivaganga Archaeological Group Kallirasa ,Saravanan ,Kallal Palace Nuruyal ,Kaliraasa ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்