×

காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

பொன்னேரி: திமுக கூட்டணியின் திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பொன்னேரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேறு யாரும் அல்ல. கர்நாடகாவில் பாஜகவை கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர். ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கை சின்னத்துக்கு 3 லட்சத்து 57 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். தற்போது நீங்கள் ஒரே ஒரு வாக்குறுதி கொடுக்க வேண்டும். அதாவது 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை வெற்றி பெற செய்ய வேண்டும். கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரது ஆசீர்வாதம் மற்றும் கூட்டணி கட்சியின் ஆசிர்வாதம் உள்ள நமது வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சொன்ன வாக்குறுதிகளில் போட்ட முதல் கையெழுத்து மகளிர் பேருந்து வசதி, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள். நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் வரி பணத்துக்கு ஒன்றிய அரசு கொடுப்பது 29 காசு மட்டும்தான். அதனால் மோடியின் மறுபெயர் 29 காசு. 2019ம் ஆண்டு மோடியும் எடப்பாடியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக வைக்கப்பட்ட கல் இப்போது காணவில்லை.

திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு மேம்பாலம், பெரியபாளையம் கோயில், பழவேற்காடு முகத்துவார சாலை பணி உள்ளிட்டவைகளை 90 சதவீத பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதிமுக அமைச்சர் வீட்டில் சோதனை நடக்கிறது. அதை கண்டித்து அக்கட்சி எந்த ஒரு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கவில்லை. திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளரை வெற்றி பெற செய்தால் மாதத்துக்கு ஒருமுறை வந்து மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோருடன் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வேன். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் காந்தி , எம்எல்ஏக்கள் டி.ஜெ. கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

The post காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Minister ,Udayanidhi Stalin ,Ponneri ,Udhayanidhi Stalin ,Sasikanth Senthil ,Tiruvallur ,Separate ,DMK ,Tiruvallur Constituency Congress ,Shasikant ,
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...