×

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை மிகப்பெரிய கல்லூரியாக மாற்ற பாராளுமன்றத்தில் வலியுறுத்தி தொடர் நடவடிக்கை எடுத்தேன்: தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் பேட்டி

சென்னை: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை மிகப்பெரிய கல்லூரியாக மாற்றுவதற்காக பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சரை சந்தித்து தொடர் நடவடிக்கை எடுத்தேன் என தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் தெரிவித்துள்ளார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி 127, 129 ஆகிய வட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் இருக்கும் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை மிகப்பெரிய கல்லூரியாக மாற்றுவதற்காக பாராளுமன்றத்தில் வலியுறுத்தி மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சரை சந்தித்து தொடர் நடவடிக்கை எடுத்தேன். அதன் காரணமாக ரூ.209 கோடி நிதி பெறப்பட்டு 410 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகளுக்கான கட்டடங்கள், வெளி நோயாளிகளுக்கான கட்டங்கள், நிர்வாக பிரிவுக்கான கட்டடங்கள், மாணவர்களுக்கான விடுதிகள் கட்டப்படன. இவை அனைத்தும் நான் எடுத்த நடவடிக்கை.

2021ம் ஆண்டு இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் 32 ஆசிரியர்கள் வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் சொய்யப்பட்டு, 27 ஆசியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் காரணமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக
தங்கள் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவர்கள் போராடி கொண்டு இருந்தனர். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சரை சந்தித்து இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி இருக்க வேண்டும். நான் எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்‌.

The post இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை மிகப்பெரிய கல்லூரியாக மாற்ற பாராளுமன்றத்தில் வலியுறுத்தி தொடர் நடவடிக்கை எடுத்தேன்: தென் சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Parliament ,ESI Medical College ,South Chennai ,Jayawarden ,Chennai ,Union ,Minister of ,Labour Welfare ,South Chennai Parliament ,South ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...