×

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை: திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 கன்னியாகுமரி ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து காலை 8.20க்கு புறப்படும், 06628 கொச்சுவேலி ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது

 

திருநெல்வேலியில் இருந்து காலை 710க்கு புறப்படும், 06642 நாகர்கோவில் ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து மாலை 6.50க்கு புறப்படும், 06647 திருநெல்வேலி ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து காலை 10.35க்கு புறப்படும், 06643 திருநெல்வேலி ரயில் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து மாலை 4மணிக்கு புறப்படும் 06773 கொல்லம் ரயில், மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொல்லத்தில் இருந்து காலை 11.35க்கு புறப்படும் 06772 கன்னியாகுமரி ரயில், மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5மணிக்கு புறப்படும் 06435 நாகர்கோவில் ரயில், மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர 06670/06771 கொல்லம் – ஆலப்புழா – கொல்லம் மற்றும் 06425 கொல்லம் – திருவனந்தபுரம் ஆகிய ரயில்களும் மார்ச் 29ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து! appeared first on Dinakaran.

Tags : Nagako ,Chennai ,Kanyakumari ,Nagko ,Thiruvananthapuram Railway Fort ,Nagarkoville ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...