×

வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்

 

வலங்கைமான், மார்ச் 29: கடந்த அதிமுக ஆட்சியில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த கோஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா காணப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனத்தின் மூலம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள வருவாய்த்துறையினர் ஊரக வளர்ச்சித் துறை யினர் கல்வித்துறையினர் உள்ளிட்ட பலரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவில் கொள்முதல் செய்து வந்தனர். இவர்கள் கொள்முதல் செய்யும் விதமாக கடன் வசதியும் செய்யப்பட்டிருந்தது இது நீங்களாக பொதுமக்களும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவினை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா பேரூராட்சி பகுதியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய விற்பனை பிரிவை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து ஒரு சில மாதங்களிலேயே வலங்கைமானில் செயல்பட்டு வந்த கோ-ஆப்டெக்ஸ் விற்பனை பிரிவு மூடுவிழா காணப்பட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்களின் கோரிக்கையை அடுத்து மீண்டும் கோஆப்டெக்ஸ் விற்பனை பிரிவு வலங்கைமானில் திறக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Cooptex ,Walangaimaan ,Walangaiman ,Co-optex ,Valangaiman ,AIADMK ,Tiruvarur district ,
× RELATED வலங்கைமான் பகுதியில் வேகமாக குறைந்து...