×

பள்ளி மாணவர்களுக்கு வானியல் செயல்பாடுகள் குறித்து விளக்கம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுவாற்றல் பள்ளியில் வானியல் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு பகுதியில் உள்ள அணுவாற்றல் பள்ளி 1ல் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோள்களின் செயல்பாடுகள் குறித்த விளக்கம் அளிக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில், அணுவாற்றல் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பார்த்தசாரதி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் தொலைநோக்கி கருவிகள் மூலம் செவ்வாய் மற்றும் வியாழன் போன்ற கோள்களை காண்பித்து அவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.  இதில், பள்ளி துணை முதல்வர் சேஷன் மற்றும் ஆசிரியர்கள் சேகர், கலைச்செல்வன், அஜீத், தீபக், மைதிலி மற்றும் மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு வானியல் செயல்பாடுகள் குறித்து விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thirukkalukkunram ,Kalpakkam Nuclear School ,Nuclear Power School 1 ,Kalpakkam nuclear power ,
× RELATED திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்...