×

ஆந்திரா அரசு பேருந்தில் கடத்தி வந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மாதவரத்திற்கு செல்லும் அரசு பேருந்தில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, பேருந்தில் இருந்த 2 பயணிகள் வைத்திருந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக போலீசார் கஞ்சா கடத்தி வந்த இருவரையும் கைது செய்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் பாய்(28), பதுமன்(24) என தெரியவந்தது. தொடர்ந்து 2 பேர் மீதும் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோன்று, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் நேற்று மதியம் ஆரம்பாக்கம் போலீஸ்சார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஆந்திராவிலிந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகம்படும் படி பேருந்தின் இருக்கையில் அமர்ந்திருதவரின் பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 3 அரை கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

உடனே அவரை கைது செய்த போலீசார் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது(25) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பொன்னேரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடியில், தொடர்ந்து போலீஸாரின் சோதனை வேட்டையில் கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதே நோரத்தில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் வழியாகவும், கஞ்சா கடத்தப்படுவதை போலீஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து கூறினர்.

The post ஆந்திரா அரசு பேருந்தில் கடத்தி வந்த 9 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra government ,Gummidipoondi ,Inspector ,Tillibabu ,Elavoor ,Kummidipoondi ,Nellore ,Madhavaram ,Andhra ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு