×

கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கும்பகோணம், மார்ச்28:தமிழக திருப்பதி என்று போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தமிழக திருப்பதி என்று போற்றப்படுவதுமான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் நேற்று பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது உற்சவர் பொன்னப்பர் பூமிதேவி தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க கருடன் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தினமும் காலை மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஏப்.4ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

The post கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Panguni Chariot Festival ,Oppiliyappan Temple ,Kumbakonam ,Tirupati ,Swami ,Hoisting ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...