×

கொசூர், பஞ்சப்பட்டியில் சின்னம் பொறிக்கப்பட்ட டீ சர்ட் ரூ.68 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

 

குளித்தலை, மார்ச் 27: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட – குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை குழு நேற்று கொசூர் கிராமத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.5000 மதிப்பு மிக்க சின்னம்பொறிக்கப்பட்ட 26 டீ சர்ட்களை வைத்து கொண்டு டீ கடையில் சுமார் 10 நபர்கள் பேசிக்கொண்டு இருந்ததை வாகன சோதனையில் கண்டறியப்பட்டது.

இந்த தொகைக்குரிய சரியான ஆவணம் ஏதும் சமர்பிக்க விசாரணை மேற்கொண்டபோது இந்த நபர்கள் டீ சர்ட்களை டீ கடையில் விட்டு சென்று விட்டனர். தொடர்ந்து சர்ட்களை பறக்கும் படை குழு பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைத்தனர். இதேபோல குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கான நிலையான கண்காணிப்பு குழு நேற்று குளித்தலை தொகுதிக்குட்பட்ட பஞ்சப்பட்டி அருகே வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது குளித்தலையிலிருந்து பஞ்சப்பட்டி வழியாக மாயனூர் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சோதனை மேற்கொண்ட போது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞிலி கிராமம் தனபால் ( 24) என்பவரிடம் ரூ.68,000 இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. இந்த தொகைக்குரிய சரியான ஆவணம் ஏதும் சமர்ப்பிக்காததால், தொகையினை நிலையான கண்காணிப்பு குழு பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி இடம் ஒப்படைக்கப்பட்டு, அத்தொகையினை பாதுகாப்புக்காக குளித்தலை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

The post கொசூர், பஞ்சப்பட்டியில் சின்னம் பொறிக்கப்பட்ட டீ சர்ட் ரூ.68 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kosur ,Panchapatti ,Kulithalai ,Flying Squad ,Kulithalai Assembly Constituency ,Parliamentary ,Dinakaran ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...