×

திருத்தணி அருகே ரூ.1.14 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறும் நிலையில் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. திருவள்ளூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான த.பிரபு சங்கர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் ஆங்காங்கே ஆய்வு செய்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி திருத்தணி வட்டம், அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வி.எம்.ராஜ் என்பவர் நேற்று காரில் வந்து கொண்டிருந்தார்.

அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் மடக்கி சோதனை செய்தபோது, அதில் ரூ.1.14 லட்சம் இருப்பது தெரிய வந்தது. தொழிற்சாலை நடத்தி வரும் வி.எம்.ராஜ் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக இப்பணத்தை கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும் உரிய ஆவணங்களின்றி அவர் அந்த பணத்தை கொண்டு சென்றதால் அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அந்த பணம் திருவள்ளூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்திடவும், உரிய மேல்நடவடிக்கைகாகவும் உதவி தேர்தல் அலுவலரான வட்டாட்சியர் வாசுதேவனிடம் ஒப்படைக்கப்பட்டது.

* ரூ.53 ஆயிரம் பறிமுதல்
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னீர்குப்பம் – ஆவடி சாலை, வீரராகவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஐஸ்கிரீம் தொழில் செய்து வரும் போரூரைச் சேர்ந்த தினேஷ் (19), உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.53 ஆயிரத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.53 ஆயிரத்தை பறிமுதல் செய்து பூந்தமல்லி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

The post திருத்தணி அருகே ரூ.1.14 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Thiruvallur ,Tiruvallur ,District Election Officer ,Collector ,T. Prabhu Shankar ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...