×

கொள்ளிடம் அருகே கோழி குஞ்சை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது

கொள்ளிடம், மார்ச் 26: கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் கோழிக்குஞ்சை விழுங்கிய நல்லபாம்பு பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமம் சோமு என்பவரின் வீட்டு முன்புறம் மற்றும் பின்புறம் கடந்த 10 நாட்களாக ஒரு நல்லபாம்பு வந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து அங்குள்ளவர்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு பக்கத்தில் உள்ள கோழி கூண்டிற்குள் கோழிகள் கத்தும் சப்தம் அதிகமாக இருந்தது. இதனால் அங்கு சென்று பார்த்தபோது கூண்டிற்குள் ஒரு நல்ல பாம்பு இருப்பது தெரியவந்தது.

உடனே சீர்காழியில் உள்ள பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடிவீரர் பாண்டியன் கோழிக்குஞ்சை விழுங்கிவிட்டு நல்ல பாம்பு கூண்டுக்குள் இருப்பதை கண்டறிந்தார். சுமார் ஐந்து அடி நீளம் உளள நல்ல பாம்பை கூண்டில் இருந்து லாவகமாக பிடித்ததார். பின்னர் அந்த பாம்பை சீர்காழி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து பாம்பு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு வனத்தில் விடப்பட்டது. பாம்பு உரிய நேரத்தில் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு விட்டதால் சோமு குடும்பத்தினர் மற்றும் சுற்றுப் புறத்தை சேர்ந்த குடியிருப்பு வாசிகளும் அச்சத்திலிருந்து விடுதலை அடைந்தனர்.

The post கொள்ளிடம் அருகே கோழி குஞ்சை விழுங்கிய நல்லபாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Kollid ,Kollidam ,Thandavankulam ,Mayiladuthurai district ,Somu ,
× RELATED கொள்ளிடம் கரையோரம் தைல மரத்தோப்பில் தீ