×

குளித்தலையில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி

குளித்தலை, மார்ச் 26: குளித்தலையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதியில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக வருவாய்த்துறை பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். இதை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான தனலட்சுமி துவங்கி வைத்தார், வட்டாட்சியர் சுரேஷ், கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகை, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பயணியர் விடுதி, காந்தி சிலை பேராளும்மன் கோவில் தெரு , பெரியாண்டவர் தெரு, கடைவீதி, பஜனை மடம், மாரியம்மன் கோவில், வைசியால் தெரு, பெரிய பாலம், வையாபுரி நகர், தெப்பக்குள தெரு, ஆர் எஸ் ரோடு, மத்திய கூட்டுறவு வங்கி, வாசகர் சாலை, அண்ணாநகர் புறவழிச்சாலை, மணப்பாறை ரயில்வே கேட், சுங்க கேட், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, கடம்பர் கோவில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், காவல் நிலையம் வழியாக மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.

The post குளித்தலையில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Parliamentary ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...