×

கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவருக்கு காவடி சுமந்த பக்தர்கள்: சிறப்பு வழிபாடுகள் நடத்தினர்

 

கொடைக்கானல், மார்ச் 26: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு. கொடைக்கானல் குறிஞ்சி மலையில் உள்ள முருகனுக்கு 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, கொடைக்கானலில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்தனர்.

இதன்படி கொடைக்கானல் நாயுடுபுரம், அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், அண்ணாநகர், டிப்போ உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகள் மற்றும் நகரை அடுத்துள்ள குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் என, 1000க்கும் மேற்பட்டோர் கோயிலுக்கு காவடி எடுத்து வந்து சிறப்பு வழிபாடுகைள நடத்தினர்.

இவர்களின் காவடி ஊர்வலம் நாயுடுபுரத்திலிருந்து ஏரிச்சாலை, அண்ணா சாலை, லாஸ் காட் சாலை வழியாக குறிஞ்சி ஆண்டவர் கோயிலை வந்தடைந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் காவடிகளுடன் முருகனுக்கான பாடல்களை பாடி ஆடிக்கொண்டே வந்து குறிஞ்சிமலை முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பின்னர் கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவருக்கு காவடி சுமந்த பக்தர்கள்: சிறப்பு வழிபாடுகள் நடத்தினர் appeared first on Dinakaran.

Tags : Kavadi ,Lord ,Kurinji ,Kodaikanal ,Panguni Uthra ,Murugan ,Kodaikanal Kurinji Hill ,Kurinji Andavar Temple ,
× RELATED மோகனூர் முருகன் கோயிலில் சிறப்பு பூஜை