நெல்லை, மார்ச் 26: நெல்லை மக்களவை தொகுதிக்கான பாஜ, அதிமுக வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுத்தாக்கலின்போது சொத்துபட்டியலை தாக்கல் செய்தனர். நெல்லை மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதில் நயினார் நாகேந்திரனுக்கு ரூ.12.61 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.1.91 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.2.61 கோடி கடன் உள்ளது.
அவரது மனைவி சந்திரா நாகேந்திரனுக்கு ரூ.12.03 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.5.98 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவருக்கு ரூ.2.52 கோடி மதிப்பில் கடன் உள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர் ஜான்சி ராணி நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு ரூ.21.5 லட்சம் அசையும் சொத்துகளும், ரூ.2 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவருக்கு ரூ.36.55 லட்சம் கடன் உள்ளது. அவருடைய கணவர் முருகானந்தத்திற்கு ரூ.74.5 லட்சம் அசையும் சொத்துகளும், ரூ.5 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன. அவருக்கு ரூ.1.19 கோடி கடனும் உள்ளது.
The post நெல்லை மக்களவை தொகுதி பாஜ, அதிமுக வேட்பாளர்கள் சொத்து பட்டியல் appeared first on Dinakaran.