×

வாணியக்குடியில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

 

குளச்சல்,மார்ச் 24 : குளச்சல் அருகே வாணியக்குடியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கு சாத்தியக் கூறுகளை கண்டறிய தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு பணிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அங்கு ஆய்வு பணி நடந்து வந்தது. இறுதி கட்டமாக சுற்றுச்சூழல் தன்மை சமூக பொருளாதார ஆய்வு நிபுணர் ஷர்மிஷ் மொகந்தி,தண்ணீர் தர நிபுணர் அனிருத் ராம்,மண் ஆராய்ச்சி நிபுணர் பட்டேல் சத்தம், அதிர்வு வல்லுனர் நவாரே, புவியியல் வல்லுனர் டெர்ரி மக்காடோ, இடர் மதிப்பீடு வல்லுனர் கேசவதாஸ் ஆகியோர் அடங்கிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவினர் நேற்று வாணியக்குடி வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு குழு ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கும். அதன் பின்னர் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என துறைமுக வட்டாரம் தெரிவித்தது. ஆய்வின்போது பங்குத்தந்தை சகாய ஆனந்த், பங்கு பேரவை துணைத்தலைவர் அமலன், செயலாளர் ஜிம்சன், பொருளாளர் ஜெயசீலன், துணைச்செயலாளர் நெல்சன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post வாணியக்குடியில் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vaniyakudi ,Kulachal ,Tamil Nadu government ,
× RELATED குளச்சல் அருகே தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்