×

திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது

திருமயம், மார்ச் 24: திருமயம் அருகே அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டு பஸ் மரத்தில் மோதி நின்றதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து ராங்கியம் வழியாக கீழச்சீவல்பட்டி செல்லும் அரசு பஸ் தடம் எண் 8 சுமார் 20 பயணிகளுடன் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது ராங்கியம் பகுதியில் உள்ள மிதிலைப்பட்டி வளைவு அருகே பஸ் வந்தபோது, டிரைவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையோரம் இருந்த மரம், சுவற்றில் மோதி நின்றது.

மரத்தின் மீது பஸ் மோதியதால் மரம் முறிந்து அருகில் இருந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் பின்புறம் சேதம் அடைந்தது. அதேசமயம் அரசு பஸ் முன்புறம் பலத்த சேதம் அடைந்த நிலையில் டிரைவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அரசு பஸ் மெதுவாக செல்லும்போது டிரைவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

The post திருமயம் அருகே டிரைவருக்கு திடீர் வலிப்பு பஸ் மரத்தில் மோதி நின்றது appeared first on Dinakaran.

Tags : Thirumayam ,Pudukottai district ,Ponnamaravathi ,Rangiyam ,Keecheevalpatti ,Tirumayam ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...